ஈரோடு வாசல் சிறுகதைப் போட்டி 2026



ஈரோடு வாசல் சிறுகதைப்போட்டி முதல் முறையாக இந்த வருடம் நடத்தப்படுகிறது. அறிவிக்கப்பட்ட இரண்டாவது நாளிலிருந்தே கதைகள் வரத் தொடங்கின. போட்டியின் இறுதி நாளான 28 பிப்ரவரி 2026 இரவு 12 மணி வரை அனுப்பப்பட்ட 283 சிறுகதைகள் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

போட்டியாளர்கள் அனைவருக்கும் இந்த வலைதளத்தின் சுட்டி (ஈரோடு வாசல் – தமிழ்முற்றம்) மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. ஈரோடு வாசல் சிறுகதைப்போட்டி 2026 தொடர்பான தகவல்கள், அடுத்தடுத்த சுற்றுகளுக்கான அறிவிப்புகள் மற்றும் பிற செய்திகளை அறிய இந்த வலைதளத்தை தொடர்ந்து பின்தொடருங்கள்.

ஆர்வத்துடன் பங்கேற்று தங்கள் கதைகளை அனுப்பிய அனைவரின் ஏகோபித்த ஆதரவுக்கும் எங்கள் மனமார்ந்த அன்பும் நன்றியும். போட்டியின் அடுத்த சுற்று பற்றிய தகவல்கள் அடுத்த பதிவில் வெளியாகும்.

No comments:

Post a Comment